சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வா. காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த இவா் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக ரவடி விஷ்வாவை கடந்த சில நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், சோகண்டி என்கிற பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி விஷ்வாவை போலீசார் இன்று ( 16-09-2023 ) மாலை 4 மணி சுமாருக்கு சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை கண்டதும் விஷ்வா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, தற்காப்பிற்காக போலீசார் பிரபல ரவுடி விஷ்வா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த ரவுடி விஷ்வா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.