அஜீத்தின் வலதுகரமாக திகழ்ந்த…
பிரபல சினிமா தயாரிப்பாளர் நிக்ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி காலமானார் !
நடிகர் அஜித்குமார் நடித்து வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான வாலி உள்ளிட்ட முகவரி, சிட்டிசன், ரெட், ஆஞ்சநேயா, வில்லன், வரலாறு என அஜித்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 9 படங்களை தயாரித்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.

விக்ரமின் நடிப்பில் வெளிவந்ந காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு உட்பட ஏராளமான தமிழ் படங்களைத் தயாரித்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இறுதியாக நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்கிற இணையதொடரில் காவல் அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்தார். நிக் ஆர்ட்ஸ் என்கிற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த இவர், கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் ( கேன்சர் ) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவில் ( 28-4-2023 ) காலமானார். அவருக்கு வயது 55.
எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று ( ஏப்ரல் 29ம்தேதி ) மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.