தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஏறக்குறைய ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக ஒருபுறம் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில்,
மறுபுறம் கட்சி உட்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக மாணவர் அணித் தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாணவர் அணிச் செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.