Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூரில் அதிமுகவினர் வைத்த வெடியால் எஸ்.எஸ்.ஐக்கு கண்பார்வை பாதிப்பு

திருச்சி, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், கூத்தைப்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.  இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. டி.கார்த்திக் செய்திருந்தார். இவ் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்,அக் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் ஆகியோர் வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக அதிமுகவை சேர்ந்த வாழவந்தான் ராஜா என்பவர் வெடி வைத்துள்ளார். வெடி வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் அடிபட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருவெறும்பூரில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி, அவரை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர்.  இந்நிலையில், இந்த விவகாரம் சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, அதிமுக அமைப்புச் செயலாளர் மனோகரன், உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.நிலையில் வெடிவைத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ராஜா (36),அதே பகுதியை சேர்ந்த ராகவன் (36), வடக்கு காட்டூரை சேர்ந்த முகமது ரபிக் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்