Rock Fort Times
Online News

துறையூர் அருகே இறுதி சடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து…- ஒருவர் பலி-9 பேருக்கு பலத்த தீக்காயம் !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஆலத்துடையான் பட்டியில் ராசாமணி என்ற பெண் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார். அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது வெடி வெடித்துள்ளனர். வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக அருகிலிருந்த சாக்கு மூட்டையில் தீ பட்டு சிதறியதில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட பலர் மீதும் தீப்பொறி பற்றியுள்ளது. இதில் 10 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், ஸ்ரீதர் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மீதி 9 பேருக்கும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்வில் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்