நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் பிரயோஜனம் இல்லை- தானே களத்தில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்த திமுக கவுன்சிலர்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி தலைவராக செல்வராணியும், ஆணையராக சுரேந்திரா ஷா என்பவரும் உள்ளனர். நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தநிலையில் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கழிவுநீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. மேலும், குப்பைகளும் தேங்கியதால் துர்நாற்றம் வீசியதுடன் நோய்தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மூன்றாவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால், பொதுமக்களின் நலன்கருதி தாமே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி திமுக கவுன்சிலர் கார்த்திகேயன் துறையூர் மூன்றாவது பெரிய ஏரி அருகே உள்ள வடக்குத்தெரு பகுதியில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றி சாக்கடையை சுத்தம் செய்தார். அவரை வார்டு மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.