Rock Fort Times
Online News

தெய்வத்தால் ஆகாதெனினும்… திருக்குறளோடு திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளர் ப.குமார் டிஜிட்டல் பிரச்சாரம் தொடக்கம்…!

அதிமுக சார்பில் இன்று(மார்ச் 27) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூரில் முன்னாள் எம்.பி.யும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த தேர்தலில் இதே திருவெறும்பூரில் தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இந்நிலையில் தற்போதைய தேர்தலில் திருவெறும்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.குமார் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருவள்ளுவரின் திருக்குறளோடு தனது டிஜிட்டல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில்., “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” அறிஞர் அண்ணாவின் அறிவும், புரட்சித் தலைவரின் வீரமும் கொண்டு, புரட்சித் தலைவி அம்மாவால் அடையாளமும் ஆசீர்வாதமும் பெற்ற, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது விசுவாசம் கொண்டுள்ள நான், புரட்சித் தலைவி அம்மாவின் சாசனமான “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாக்கை என் வாழ்நாள் வாழ்வியலாகக் கொண்டு, “நேர்மை எமக்குண்டு, நலங்களை காத்திடுவோம்” “நாளும் தோறும் மக்களுக்காக, எம் வாழ்க்கையை சமர்ப்பிப்போம்” கழகத்தின் சார்பாக திருவெறும்பூர் -தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உங்களில் ஒருவனான நான், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்