Rock Fort Times
Online News

எம்.பி எலெக்ஷனுக்கு முன்பே திருச்சி சீனியர் காங்கிரசாருக்கு எதிராகும் சு.திருநாவுக்கரசர்!

 

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 17 கோட்டங்களுக்கு கடந்த 12ம் தேதி புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதில் பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் பரிந்துரை படியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஒப்புதலின்படியும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட கோட்டத் தலைவர்கள் பின்வருமாறு…

ஸ்ரீரங்கம் 1,2,3,4 வார்டுகளுக்கு ஜெ .ஜெயம் கோபியும்,

திருவானைக்காவல் 5,6,7 வார்டுகளுக்கு ஆர். தர்மேஷ் அகிலும்,

மலைக்கோட்டை 12,13,14,15 ஆகிய வார்டுகளுக்கு ஜே. வெங்கடேஷ் காந்தியும்,

மார்க்கெட் 19,20,21 வார்டுகளுக்கு எஸ். சம்சுதீனும்,

தாராநல்லூர் 16,17,18 ஆகிய வார்டுகளுக்கு ஆர். ஜி. முரளியும்,

வரகனேரி 30,31,32 வார்டுகளுக்கு

எ‌. இஸ்மாயிலும்,

பாலக்கரை 33,34,49,50 வார்டுகளுக்கு ஜே. ஜே. வின்சென்ட்டும்,

சுப்பிரமணியபுரம் 46,47,59,61 ஆகிய வார்டுகளுக்கு எஸ் எஸ் .எட்வின்ராஜூம்,

ஏர்போர்ட் 60,63,64,65 ஆகிய வார்டுகளுக்கு கே. கனகராஜூம்,

அரியமங்கலம் 35,36,37,38 வார்டுகளுக்கு டி.அழகரும்,

காட்டூர் 39,40,41,42,43 ஆகிய வார்டுகளுக்கு ஏ. ராஜா டேயனியல் ராயும்,

பொன்மலை 44,45,48 வார்டுகளுக்கு ஜி. பாலச்சுந்தரும்,

உறையூர் 8,9,10,11 ஆகிய வார்டுகளுக்கு கே. பாக்கியராஜூம்,

புத்தூர் 24,25,26 ஆகிய வார்டுகளுக்கு பி. மலர் வெங்கடேசும்,

தில்லை நகர் 22,23,27,28 ஆகிய வார்டுகளுக்கு ஆர்.கிருஷ்ணாவும்,

ஜங்ஷன் 29,51,52,53,54 ஆகிய வார்டுகளுக்கு வி. பிரியங்கா பட்டேலும்,

பஞ்சபூர். 55,56,57,58,62 ஆகிய வார்டுகளுக்கு எ.மணிவேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அனைவரும் எம்.பி திருநாவுக்கரசரின் பரிந்துரை என கூறப்படுகிறது.

மேலும் முன்னதான இந்த அறிவிப்பில் நீண்ட நெடிய காங்கிரஸ் தளபதிகளான,

அனைத்து தரப்பு மக்களிடமும் யதார்த்தமாக பழகும் இயல்புடையவரான ஶ்ரீரங்கம் கோட்டத்தலைவரான சிவாஜி சண்முகம், பாலக்கரை கோட்டத் தலைவரான அப்பகுதியின் மெஜாரிட்டி சமூக்கத்தை சேர்ந்த, பொதுஜன பலம் உள்ள முன்னாள் கவுன்சிலரான இனிகோ ஜெரால்டு,

மேலச்சிந்தாமணி பகுதியில் மக்கள் செல்வாக்குள்ள மலைக்கோட்டை கோட்ட தலைவரான ஏ.ரவி நாடார்,

உறையூர் கோட்டத் தலைவரான பிரேம்,

பொன்மலை கோட்டை தலைவரான செல்வகுமார் ஆகிய ஐந்து கோட்டத் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டு இருந்தது.

இது அக்கட்சியின் உண்மை தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று ( 13/01/2024 ) மாலை திருச்சி அருணாச்சலம் மன்றத்தில்

நீக்கப்பட்ட ஐந்து கோட்டத் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

எம்.பி திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர் ரெக்ஸூக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது.,

“இந்த அறிவிப்பு என்பது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் எடுத்த தன்னிச்சையான முடிவு. எங்களை இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது. காங்கிரஸ் பேரியக்கத்தை பொறுத்தவரை நாங்கள் நியமிக்கப்பட்ட கோட்டத் தலைவர்கள் அல்ல.

காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்.

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் காலம்தான் ஆகிறது. எங்களது பதவி காலம் என்பது மூன்று வருடம். இன்னும் இரண்டு வருட காலம் பதவி இருக்கிறது. எனவே நிலமை இப்படி இருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளான எங்களை மாவட்டத் தலைவர் ரெக்ஸ் எப்படி மாற்ற முடியும் ?

இது அவரது தன்னிச்சையான முடிவு இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், இளம் தலைவர் ராகுல் காந்திக்கும், மாநில தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். எம்.பி திருநாவுக்கரசரின் கைக்கூலியான ரெக்ஸின் இந்த அறிவிப்பை ஏற்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.

 

கடந்த 2019ம் ஆண்டு பாராளுமன்ற வெற்றி பெற்ற பிறகு திருச்சி காங்கிரசையும், அக்கட்சி தொண்டர்களையும்,

ஏன்?

வாக்கு செலுத்திய மக்களையும் கூட ஏற,இறங்க கூட பார்க்கவில்லை என எம்.பி திருநாவுக்கரசர் மீது அதிருப்தி அலை வீசும் நிலையில், சீனியர் காங்கிரசஸ் கட்சியினர் இத்தனை பேரை பதவியை விட்டு நீக்கி இருப்பது, அவரது அடுத்த எம்.பி கனவுக்கு 100% வேட்டு வைக்கும் என்பதில் மாற்றமிருக்க போவதில்லை.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்