திருச்சி துறையூர் வட்டம் நெட்ட வேலம்பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்சி மாவட்ட எஸ்.பி வீ. வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுதது எஸ்.பி உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் பொறுப்பு யசோதா மற்றும் காவலர்கள் கார்த்திக் மற்றும் விக்னேஷ், நெட்ட வேலம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெட்ட வேலம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துசாமி ( வயது 49) என்பவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தோட்ட வீட்டில் 40 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் 1.5 லிட்டர் சாராயம், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்கள் ஆகியவற்றை போலீசாா் பறிமுதல் செய்தனர். மேலும் முத்துச்சாமியின் மீது வழக்கு பதிவு செய்து துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் ஆய்வாளர் பொறுப்பு யசோதா விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.