தமிழர் திருநாள் பொங்கல் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று(ஜனவரி 14) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உ-றுப்பினர் அருண்நேரு ஆகியோர் பங்கேற்று பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் நடைபெற்ற கோலப்போட்டியினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Comments are closed.