Rock Fort Times
Online News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் சமத்துவ பொங்கல் விழா… * பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் பங்கேற்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா திருச்சி என்.எஸ்.பி. ரோடு மலைக்கோட்டை அருகே நேற்று(ஜன. 14) நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று, பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கலை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு, சமத்துவத்தை வெளிப்படுத்தினர். இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாவட்ட செயலாளர் செந்தில் என்.பாலு, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாநகர செயலாளர் வி.பி.ஆறுமுகபெருமாள், மாநகர பொருளாளர் ஜானகிராமன், திருச்சி மங்கள் அண்ட் மங்கள் நிறுவன உரிமையாளர் மூக்கப்பிள்ளை, சாரதாஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ரோஷன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், மாநகர செயலாளர் திருமாவளவன், கல்யாணி கவரிங் உமாநாத், ஆனந்தா கார்ப்பரேஷன் உரிமையாளர் ரமேஷ், அமர் ஜூவல்லரி அபிஷேக், நக்கோடா குல்தீப், கொங்கு தங்க மாளிகை ரமேஷ், ரெங்கா ஜூவல்லரி பாலு, கணேசன் ஸ்டோர் ஈஸ்வரன், ராமஜெயம் டெக்ஸ்டைல்ஸ் நிவேதா, சிவம் ரெடிமேட்ஸ் ராகேஷ் மற்றும் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர்கள் சின்னச்சாமி, ராஜாங்கம், காதர்மைதீன், கமலக்கண்ணன், தீபக் ராஜா உள்பட வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

*சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை*

பின்னர் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறும்போது, “அரசு சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் என்.எஸ்.பி.ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சார்பாகவும் தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியை இன்னும் 10 நாட்களில் தொடங்க இருக்கிறோம். இந்த பகுதிக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக மெயின்கார்டுகேட் ஆர்ச் முதல் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல பேட்டரி வாகனங்களை இலவசமாக இயக்க உள்ளோம்.இதே பேட்டரி வாகனம் மூலம் கோவிலுக்கும் செல்லலாம். மேலும், அங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவதோடு, இந்த தெருவையும் நாங்களே சுத்தம் செய்து, பராமரிக்க இருக்கிறோம். இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கும், பொதுமக்களுக்கு மனநிம்மதியை தரும் இடமாக மாற்றவும் தமிழக அரசுடன் இணைந்து பேரமைப்பு இந்த பணியை தொடங்கும்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்