எடப்பாடி பழனிச்சாமி 27 ஆம் தேதி திருச்சி வருகை -வரவேற்க தயாராகிறது திருச்சி புறநகர் தெற்குமாவட்ட அதிமுக
திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி இல்ல திருமண விழாவில் வரும் 27 ஆம் தேதிகாலை 11 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள திருச்சி வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக, திருச்சி புறநகர் தெற்குமாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப .குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.