அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ்பாபு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார் .இந்த நிலையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதிமுக தலைமையகத்தில் அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி. தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.