சீனாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு ஆண்கள்
19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனியர் பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்றுக்கொடுத்த வீரர்கள் மற்றும் பங்கேற்ற திருச்சி, தஞ்சை, மதுரையை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளி பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெய் கிருஷ்ணா, குகன் வசந்த்,
வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியை சேர்ந்த தேவிபிரியா, ஹீரா, ரேஷ்மிஸ்ரீ, ஜெயஸ்ரீ , யோகீதா, சீனியர் ஆண்கள் பிரிவை சேர்ந்த நிசாந்த், சந்தோஷ் சிவா, கோகுல், சோமேஸ்வர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு மாணவ- மாணவிகளின் உறவினர்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது மாணவ மாணவிகள் கூறுகையில், சீனாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சொந்த செலவில் சீனா சென்று போட்டியில் கலந்து கொண்டதாகவும், அரசு தங்களுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும் எனவும், பயிற்சி செய்வதற்கு உரிய கட்டமைப்பை அரசு உருவாக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
1
of 916
Comments are closed, but trackbacks and pingbacks are open.