Rock Fort Times
Online News

அமைச்சர் கே.என்.நேரு இல்லங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு…! (வீடியோ இணைப்பு)

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று(07-04-2025) காலை அவரது நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல, திருச்சி தில்லைநகரில் உள்ள ஆறாவது மற்றும் பத்தாவது கிராசில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 8 மணி முதல் சுமார் ஒன்பதரை மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது . ஒரு ட்ராலி சூட்கேஸ், பிரிண்டர் மற்றும் ஒரு பெரிய பை ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் அதில் என்ன இருக்கின்றன என்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். அதேபோல கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவடைந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்