Rock Fort Times
Online News

தேர்தல் பிரச்சார செலவு – சலுகை அளித்தது தேர்தல் ஆணையம் !

அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் அனுப்ப வேண்டும். தேர்தல் செலவில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை பத்தாம் தேதி வெளியிடப்பட உள்ளது. செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள், தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை ஜனவரி 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம் வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கேட்க இயலாது என அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்