இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது: துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் இறுதி கட்ட ஓட்டு வேட்டை…!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று(17-04-2024) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுவதால் திமுகவினர் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் இறங்கினர்.
புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட,மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது . இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன்,
மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா ,மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.