Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வைக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து பேனரில் எடப்பாடி பழனிசாமி முகம் கருப்பு மையால் அழிப்பு: தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு…!(வீடியோ இணைப்பு)

தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி( வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதலங்களில் தீபாவளி வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. அதேபோல அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களது  தலைவர்களின் படங்களை வைத்து பிளக்ஸ் பேனர் அடித்து தீபாவளி வாழ்த்து பேனர் ஆங்காங்கே வைத்துள்ளனர்.  அந்தவகையில் திருச்சி தில்லை நகர் 7வது கிராஸில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த தீபாவளி வாழ்த்து பேனர் ஒன்றில் எடப்பாடி பழனிசாமியின்  முகம் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.

இதேபோல, அதிமுக அலுவலகத்திற்கு செல்லும் வழி என்ற பேனரிலும் எடப்பாடி பழனிசாமியின் முகம் அழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில்  மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்  ஜெ.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகத்தை கருப்பு மையால் அழித்தது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் பேனர்கள் அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்