முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.