Rock Fort Times
Online News

பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி….

திருச்சி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு..

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான கோகுலஇந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-

திமுக ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவில் சந்திக்கவுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்படும் பூத் கமிட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடத்த முக்கிய காரணம் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவே. எனவே, நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவுக்கு லட்சக்கணக்கில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் கேசி. பரமசிவம், வனிதா, பத்மநாதன், ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா, அன்பழகன், பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன்,ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், நிர்வாகிகள் இன்ஜினீயர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், தொழிற்சங்கம் ஜெகதீசன், ராஜேந்திரன், இலியாஸ், தென்னூர் அப்பாஸ் மற்றும் வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர், பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் செல்வமணி, வசந்தகுமார், இன்ஜினீயர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், அப்பாக்குட்டி, வழக்கறிஞா் தருண், மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி பெருமாள், கன்னியப்பன், கிருஷாந்த், கிராப்பட்டி கமலஹாசன்,வழக்கறிஞா்கள் சுரேஷ், ஜெயராமன், சசிகுமார், முல்லை சுரேஷ் மற்றும் முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் ஜோதிவாணன்,டிபன் கடை கார்த்திகேயன், வரகனேரி சரவணன், எடத்தெரு பாபு, பார்த்திபன், பாலாஜி, பாலக்கரை சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ், கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், இன்ஜினீயர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு, எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், அரவானூர் பன்னீர், சுப்ரா, உறந்தை முத்தையா, தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், விஜயகுமார்,டைமன் தாமோதரன், பீமநகர் நாகராஜ், ரஜினி தனபால், சீனிவாசன், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ் ராமலிங்கம், அரப்ஷா, தர்கா காஜா, கே.பி.ராமநாதன், செல்லப்பன், ஆரி, வாசுதேவன், ஸ்பீடு வேலு, சிந்தாமணி கிருஷ்ணன், தென்னூர் ராஜா, ஈஸ்வரன், பீமநகர் சீனிவாசன், கயிலை கோபி, தியாகராஜன், காசிபாளையம் சுரேஷ்குமார், கல்லுக்குழி முருகன், கே.டி. தங்கராஜ், ஜெயகுமார், வெஸ்லி, சதிஷ்குமார், பாலக்கரை சக்திவேல், தர்கா காஜா, கே.சி.பி. ஆனந்த், பொன்.அகிலாண்டம், சந்தோஷ், ஜெகதீசன், இன்ஜினீயர் சிராஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்