திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினாா். பெல் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் என். கார்த்திக் வரவேற்று பேசினாா். கட்சியின் அமைப்புச் செயலாளர் பி. தங்கமணி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி, அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ. ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.