Rock Fort Times
Online News

ஒவ்வொரு குடும்பத்தினரும் “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்: திருச்சியில் தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(09-01-2026) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற விழாவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ஸ்டாலின்குமார், சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவில், இந்த திட்டத்தின்கீழ் வீடு, வீடாக செல்லும் தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்புகளை அமைச்சர்கள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், முதலமைச்சரின் கனவுத் திட்டமான “உங்க கனவ சொல்லுங்க” திட்டம், பொதுமக்கள் தங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக அரசிடம் எடுத்துச் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று உங்கள் கனவை சொல்லுங்க என்று கேட்பார்கள். இதற்காக அவர்களுக்கு கைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பொதுமக்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் அரசின் திட்டங்களில் பிரதிபலிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்