ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று(18-10-2023) சாமி தாிசனம் செய்தாா். அப்போது துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரெங்கநாதர், தாயாா், தன்வந்திாி, சக்கரத்தாழ்வாா், ராமானுஜா் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை கோவில் மேலாளா் தமிழ்ச்செல்வி, கண்காணிப்பாளா் வடிவுக்கரசி, உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன், கோவில் அா்ச்சகா்கள் சுந்தா் பட்டா், தீபக் பட்டா் ஆகியோா் வரவேற்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.