சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளர்களுக்கு துரை வைகோ எம்.பி.
கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆண்டு சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் ஆகும். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் அவரவர் சொந்த ஊர் செல்ல வசதியாக சுதந்திர தினத்தன்று சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். குறிப்பாக திருச்சி-மைசூர் இடையே செல்லும் திருச்சி சிறப்பு விரைவு ரயில் (கரூர், சேலம், பெங்களூர் வழியில்), திருச்சி வழியாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே செல்லும் சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு ரயில் (தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக) ஆகியவற்றை இயக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று ரயில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.