Rock Fort Times
Online News

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்…

டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவு..

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்  ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி நகர போலீஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி டி.எஸ்.பி. அசோக் தஞ்சை புறநகருக்கும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தயாள்நாயகி விழுப்புரம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல் நகர டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கும், ராமநாதபுரம் டி.எஸ்.பி. ராஜா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்