மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரு தொழிற்சாலையில் ரூ.1814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- போபால் அருகே ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 1,814 கோடி ரூபாய். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) மற்றும் டில்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்( என்சிபி) இணைந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். போதைக்கு எதிரான போராட்டத்தில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஏடிஎஸ் மற்றும் என்சிபிக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.