Rock Fort Times
Online News

துாக்க மாத்திரை தர மறுத்ததால் – மருந்து கடை உாிமையாளருக்கு அடி உதை.

4  போ் கைது.

திருச்சி பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் செந்தில் செல்வன் (வயது 36). இவர் திருச்சி மார்சிங்பேட்டை பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி மருந்து கடைக்கு வந்த ஒருவர் தூக்க மாத்திரை கேட்டுள்ளார். ஆனால் செந்தில் செல்வன் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த நபர், மேலும் 4 பேருடன் சேர்ந்து மருந்து கடை உரிமையாளர் செந்தில் செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த செந்தில் செல்வன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் வழக்கு பதிந்து பீமநகர் மார்சிங்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், ஏர்போர்ட் செம்பட்டை சேர்ந்த பிரிட்டோ, சரண், நெல்சன் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தார். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அருண்குமார், பிரிட்டோ, சரண், நெல்சன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை காவல்துறையினா் தேடி வருகின்றனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்