Rock Fort Times
Online News

லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை…!

திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 13-2-2019 அன்று மாலை தனது மொபட்டில் மகன் தினேசை(36) ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது கருப்பையா லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிாிழந்தார். தினேஷ் காயங்களுடன் உயிர் தப்பினாா். இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முசிறியை சேர்ந்த லாரி டிரைவர் பவுன்ராஜ்(49) என்பவரை கைது செய்தனர். இதுதொடா்பான வழக்கு திருச்சி 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு எம்.டார்வின்முத்து முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் பி.வெங்கடேசன் ஆஜரானார். இந்தவழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட பவுன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும்,
ரூ.1500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்