திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையம், ட்ரைபன் நிலையம், பெரியார் நகர் நீரேற்ற நிலையம் மற்றும் ஜீயபுரம் பிராட்டியூர் கூட்டு குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 10.10.2023 ) காலை 9 45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படுவதால் கம்பரசம்பேட்டை தலைமை நீா் பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும் ட்ரைபன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும் பெரியார் நகர் ,கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர் ,காஜா பேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்பா நகர் ,பாத்திமா நகர் ,கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் அய்யாளம்மன் படித்துறை கலெக்டர் வெல் நீர் பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர் , பாரி நகர், பழைய எல்லைகுடி காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலந்தூர் ,கே கே கோட்டை, மற்றும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், புத்தூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர், மற்றும் பிராட்டியூர் காவிரி நகர் ஆகிய பகுதிகளிலும் 11.10 .2023 ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 12.10 .23 முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சி உடன் ஒத்துழைக்குமாறு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.