திருச்சியில் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்! திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தினர். இன்று திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மகாமணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மகளிர் பாசறை மாவட்ட தலைவர் அம்பிகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக சொற்பொழிவாளர் பூவை. புலிகேசி,திருச்சி மாநகராட்சி மேயர், மு.அன்பழகன், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரெக்ஸ், மதிமுக சார்பில் அடைக்கலம், பெல் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வெற்றி செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபிபு ரஹ்மான், மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர் செழியன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா,மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில செயற்குமு உறுப்பினர் லதா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி இணைச்செயலாளர் திருவரங்கம் ஆனந்த், மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்கா தேவி,திமுக கவுன்சிலர்கள் முத்து செல்வம்,ராமதாஸ்,கலைச்செல்வி கமால் முஸ்தபா மற்றும் தொமுச குணசேகரன், மோகன்தாஸ்,மேலூர் குமார், என்ஜினியர் நித்தியானந்தா ம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மணிகண்டம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.
Comments are closed.