Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- விஜயவாடா மற்றும் கூடூர் ரயில் நிலையங்களில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், மதுரை ஹசரத் நிஜாமுதீன் அதிவிரைவு ரயிலானது (எண் 12651) வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், ரேணிகுண்டா, யர்ரகுண்டலா, நந்தியால், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா கனால் வழியாக மாற்றி இயக்கப்படும். மதுரை – ஓகா சிறப்பு விரைவு ரயிலானது (0951) வருகிற 26ம் தேதி ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுண்டலா, தாதிபத்ரி ரயில் நிலையங்களைத் தவிர்த்து காட்பாடி, பாக்லா, தர்மாவரம், கூட்டி வழியாக இயக்கப்படும். ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயிலானது (12663) வருகிற 18, 21, 25 ஆகிய தேதிகளில் ஹவுராவிலிருந்து 1.30 மணி நேரம் தாமதமாக அதாவது இரவு 7.10 மணிக்கு புறப்படும். ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலானது (12665) வருகிற 22, 29ம் தேதிகளில் ஹவுராவிலிருந்து 1.30 மணி நேரம் தாமதமாக அதாவது மாலை 5.40 மணிக்கு புறப்படும். திருநெல்வேலி – மாதா வைஷ்ணவ தேவி காட்ரா விரைவு ரயிலானது (16787) வருகிற 29ம் தேதி தேவைப்படும் ரயில் நிலையங்களில் 90 நிமிடங்களும், 22-ம் தேதி 1.20 மணி நேரமும் நின்று தாமதமாகப் புறப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்