திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:- மயிலாடுதுறை யிலிருந்து ஜனவரி 9 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் -16847), கச்சக்குடாவிருந்து ஜனவரி 10-ம் தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் (07435), பனாரஸிலிருந்து ஜனவரி 5 -ம் தேதி புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 4, 7, 9, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (வண்டி எண் – (16321 / 16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
அதேபோல, மதுரையிலிருந்து ஜனவரி 9 ம் தேதி புறப்பட வேண்டிய பிகானிர் விரைவு ரயில் (வண்டி எண் – 22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குஜராத் ஒகாவிலிருந்து ஜனவரி 7 -ம் தேதி புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் ரயில் (வண்டி எண் – 16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். கொல்லத்திலிருந்து ஜனவரி 11-ம் தேதி புறப்பட வேண்டிய செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் – 07176) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (வண்டி எண் – 22671 / 22672) திருச்சி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து ஜனவரி 6 அன்று புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் – 16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து ஜனவரி 7 ஆம் தேதி புறப்பட வேண்டிய ஈரோடு (வண்டி எண் – 16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். பாலக்காடு மற்றும் திருச்செந்தூரில் இருந்து ஜனவரி 9 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு ரயில்கள் (வண்டி எண் – 16731 / 16732), திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஓகாவில் இருந்து ஜனவரி 6 மற்றும் மதுரையில் இருந்து ஜனவரி 10 -ம் தேதி புறப்பட வேண்டிய மதுரை மற்றும் ஓகா சிறப்பு ரயில்கள் (வண்டி எண் – 09520 / 09519), விழுப்புரம் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.