திருச்சியில் கிடப்பில் போடப்பட்ட ட்ரைனேஜ் பணிகள்-குண்டும், குழியுமான காங்கிரீட் சாலைகள்..!* அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!
திருச்சி, கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது, ஆனந்தம் அவென்யூ. இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, ‘பைப்’ லைன்கள் போட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படாமல், காங்கிரீட் சாலைகள் மண் சாலைகளாகி குண்டும், குழியுமாக உள்ளன. இந்நிலையில் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ” மீட்டர் வாட்டர் ” இணைப்பிற்கான பள்ளமும் இங்கு தோண்டப்பட்டு அந்த வேலைகளும் பாதியிலேயே நிற்பதால் சிமெண்ட் சாலை முழுவதும் சேதமாகியுள்ளது.
இதனால், இப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது., கடந்த 2022ம் ஆண்டில் வீடுகளுக்கு தனித்தனி கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. 3 மாதங்களில் முடிப்பதாக சொல்லப்பட்ட இப்பணிகள் 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவ டையவில்லை. தற்போது புதிதாக கடந்த ஜூன் மாதத்தில் மாநகராட்சி சார்பில் மீட்டர் வாட்டர் கனெ க்க்ஷனுக்காக சாலையின் இடதுபுறம் பள்ளம் தோண்டப்பட்டது. மொத்தமே சுமார் 300க்கும் குறைவான வீடுகளே உள்ள இப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நினைத்தால் வெறும் மூன்றே நாட்களில் பணிகளை முடித்து விடலாம். ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகளும் நிறை வடையவில்லை. பைப் கனெக் க்ஷன்களுக்காக கொடுக்கப்பட்ட பள்ளங்களும் மூடப்படவில்லை. இதனால் பைக் மற்றும் கார்களில் செல்பவர்களை சாலை பள்ளங்கள் பதம் பார்க்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர், மேயர், மாநகராட்சி ஆணையர் என பலரிடம் கோரிக்கையளித்தும் எந்த பலனும் இல்லை. திருச்சியில் பல பகுதிகளுக்கு வளர்ச்சித்திட்டங்களை வேகமாக கொண்டுவந்து நிறைவேற்றித்தரும் அமைச்சர் கே.என். நேரு தனது சொந்த தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் ஆனந்தம் அவென்யூவிற்கும் நல்லது செய்வார் என தாங்கள் நம்புவதாக தெரிவித்தனர்.
Comments are closed.