Rock Fort Times
Online News

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை:* முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

1970-ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பேருந்தானது தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. ஆனால், டபுள் டக்கர் பேருந்து கடந்த 2008ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போதைய இளம் தலைமுறைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி, அயலக தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பேருந்து அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரியகோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளையைஅடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், மிகப்பெரிய அளவில் ‘தமிழ் வாழ்க’ என எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக, டபுள் டக்கர் பேருந்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன 12) தொடங்கி வைத்தார். பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த டபுள் டக்கர் பேருந்து சேவைக்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்