வருகிற மார்ச் 1ம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுக் கூட்டத்திற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விஜய்- திரிஷா குறித்து வெளிப்படையாக தான் பேசினேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன். திமுக கூட்டணியில்தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தினந்தோறும் பேட்டி கொடுத்து வருகிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.