Rock Fort Times
Online News

ரூ. 95 லட்சம் மோசடி புகாரில் டாக்டர் கைது …

திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 43). இவர் திருச்சி நாச்சிக்குறிச்சி 8-வது குறுக்குத்தெரு வாசன் வேலியை சேர்ந்த டாக்டர் பிரகாஷ், அழகேசன், டாக்டர் புரோஜா ஆகியோர் நடத்தி வந்த பங்குச்சந்தை நிறுவனத்தில் ரூ.95 லட்சம் முதலீடு செய்திருந்தாா். அந்த தொகையை இரட்டிப்பாக ரூ.1 கோடியே 90 லட்சம் திருப்பி தருவதாக அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தை தரவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த அசோக், தனக்கு தரவேண்டிய தொகையை திருப்பி தருமாறு பிரகாஷிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ், முழு தொகையையும் திருப்பி கொடுத்து விடுவதாகவும், தவறும்பட்சத்தில் தனது சொத்தை கிரயம் செய்து தருவதாக உறுதிமொழி அளித்துள்ளார். அதன்பிறகும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அசோக் புகார் மனு அளித்தார். கோர்ட் உத்தரவின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் பிரகாஷை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்