Rock Fort Times
Online News

வானவியல் அறிவியல் நிகழ்வுகளை காண வேண்டுமா?- மாணவர்களுக்கு திருச்சி அண்ணா அறிவியல் மையம் அழைப்பு….!

திருச்சி விமான நிலையம் அருகே கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா அறிவியல் மைய கோளரங்கம். இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவியல் தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  இதேபோல, ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையை தொடர்ந்து கோடைகால அறிவியல் முகாம் மே 21 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.  5 முதல் 9 ம் வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கான இந்த பயிற்சி முகாமில் முதலில்  சேருவோருக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்.  இம் முகாமில் வானவியல் , வேதியியல், இயற்பியல், மின்னணுவியல், ஓரிகாமி, யோகா உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கின்றனர். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்  0431 2332190, 2331921 என்ற கோளரங்க தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். இத்தகவலை கோளரங்க திட்ட இயக்குநர் ரா. அகிலன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்