Rock Fort Times
Online News

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய வேண்டுமா?…* திருச்சி மாவட்டத்தில் நாளை 11 இடங்களில் முகாம்!

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் நாளை (ஜூலை 12) ரேஷன் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. திருச்சி கிழக்கு வட்டத்தில் பாபு ரோடு, திருச்சி மேற்கு வட்டத்தில் சொக்கலிங்கபுரம், திருவெறும்பூர் வட்டத்தில் அம்மன் நகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கம்பரசம்பேட்டை, மணப்பாறை வட்டத்தில் கோவில்பட்டிசாலை-3, முசிறி வட்டத்தில் அய்யம்பாளையம், துறையூர் வட்டத்தில் சொரத்தூர், தொட்டியம் வட்டத்தில் தொட்டியம் 2, மருங்காபுரி வட்டத்தில் அயன்பொருவாய், லால்குடி வட்டத்தில் வாளாடி, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இனாம் சமயபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோந்த பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்