கரூரில் நாளை(செப்.17) திமுக முப்பெரும் விழா: திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கரூரில் நாளை (செப்.17) திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மாலை 4 மணி அளவில் கரூர் பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர் – நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.