திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராவதற்கு திருச்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகள் மட்டுமின்றி டெல்டா முழுவதும் உள்ள 41 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் தி.மு.க. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்று கேட்கிறார்கள். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. யார் போட்டியிட்டாலும், அனைத்து முயற்சிகளையும் எடுத்து தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்போம். தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்ட 165 பேரில் பழைய வேட்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். 60 பேர் மட்டுமே புதியவர்கள். இளைஞர்களுக்கும், மகளிருக்கும் நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்கிற எடப்பாடி பழனிசாமி மீதம் உள்ள 34 தொகுதியையும் சேர்த்து கூற வேண்டியது தானே? விஜய் பிரசாரத்தை தி.மு.க. தடுப்பதாக கூறுகிறார்கள். அவரது பிரசாரத்தை நாங்கள் ஏன் தடுக் கப் போகிறோம்?. அதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.