திருச்சியில் திமுக மாநில மாநாடு தொடங்கியது: 110 அடி கொடிக்கம்பத்தில் கழகக் கொடி ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி, சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று(மார்ச் 9) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் லட்சக்கணக்கான நாற்காலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே சாரை, சாரையாக வர தொடங்கினர். அவர்களுக்கு மதியம் கம…கம.. சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் மாலை கார் மூலம் மாநாட்டு திடலை வந்தடைந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 110 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.