Rock Fort Times
Online News

“நீட்” தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்…

நீட் தோ்வுக்கு விலக்கு கோாி தி.மு.க. சார்பில் “நீட் விலக்கு நம் இலக்கு” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், “நீட்” தேர்வுக்கு விலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் , திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் முன்னிலை வகித்தார்.இதில் கட்சியின் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் இன்ஜினீயர் பி.எம்.ஆனந்த், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், மாநகர துணை செயலாளர் கலைச்செல்வி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜய், கமால் முஸ்தபா, நாகராஜன், கனகராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் , புத்தூர் தர்மராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்