Rock Fort Times
Online News

திருச்சி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் போராட்டம் ….

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில், திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதில், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன்குமார் , துணை செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், ராஜ்குமார் , மகாமுனி, பகுதி கழக செயலாளர்கள் சிங்காரவேல், மாரீசன், பரமசிவம், அலெக்ஸ் , மோகன் , மணிகண்டன், சாத்தனூர் குமார், சங்கர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் லோகராஜ் ,பெருமாள், வழக்கறிஞர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்