Rock Fort Times
Online News

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தாயார் காலமானார்…! 

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 83. பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தத்தை சேர்ந்தவர். இவரது தம்பி எல்.கே.சுதீஷ். இவர்களது தாய் அம்சவேணிக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று(அக்.7) காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை விரைந்தனர். அம்சவேணி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்