Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகை: கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்…*அமைச்சர் சிவசங்கர்  எச்சரிக்கை! 

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர் செல்ல சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிலர் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்  சாட்டி வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு ஆம்னி பேருந்துகளில்  கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது தொடர்பாக புகார் அளிக்க  தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், 10 நிறுவனங்கள் மட்டுமே ஆம்னி பேருந்துகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளது. கட்டணத்தைக் குறைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்