ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு தீபாவளி சமயத்தில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பா் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,969 கோடி நிதி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.