வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்- மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுப்பி வைத்தார்…! (வீடியோ இணைப்பு)
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 15 பொருட்களுடன் கூடிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அதோடு, 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் ஆகியோர் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக ஆட்சியர் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவுப் பொருட்கள் திருச்சியில் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி இணைந்து தூய்மை பணியாளர்கள் 450க்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து உணவு பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பப்படும். இதேபோன்று மாநகராட்சியிலும் உணவு தயார் செய்து அனுப்பப்படுகிறது. அது இல்லாமல் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பத்தாயிரம் உணவு வகை பைகளும் அனுப்பப்படுகிறது என தெரிவித்தார்.
Comments are closed.