வயநாடு தொகுதி எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக மக்களவைச் செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்திருக்கிறார். தண்டனை காலம் இரண்டு வருடம் மற்றும் தேர்தல் சட்ட விதிப்படி ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி இவை சேர்த்து எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள முடியுமா என ராகுல் காந்தி தரப்பு சட்ட வல்லுனர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி” என்று பேசினார். இந்த அவமதிப்பு வழக்குக்கு தான் தீர்ப்பு வந்துள்ளது.
இத்தீர்ப்பு வெளியானபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்தார். 10,000 ஜாமீன் பத்திரத்தை செலுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து எம்.பி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். தற்போது எம்.பி.யாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான ஆறு என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. தகுதி நீக்கம் மூன்று சூழ்நிலைகளில் பரிந்துரைக்கப்படுகிறது. முதலாவது சட்டப்பிரிவு 102(1) மற்றும் 191(1) மூலம் முறையே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம். இங்குள்ள காரணங்களில் லாபம் தரும் பதவியை வைத்திருப்பது, மனநிலை சரியில்லாதது அல்லது திவாலாகி இருப்பது அல்லது செல்லுபடியாகும் குடியுரிமை இல்லாதது ஆகியவை அடங்கும். தகுதியிழப்புக்கான இரண்டாவது பரிந்துரையானது அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ளது. இது உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு வகை செய்கிறது.
மூன்றாவது சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA), 1951 இன் கீழ் உள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனை ஆகும். எந்தவொரு குற்றத்திற்காகவும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய தண்டனையின் தேதியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். ”
உயர் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதித்தால் அல்லது தண்டனை பெற்ற வர்க்கு ஆதரவாக மேல்முறையீட்டை முடிவு செய்தால் தகுதியிழப்பு மாற்றப்படலாம். CRPC இன் பிரிவு 389 இன் கீழ், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, ஒரு குற்றவாளியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தலாம். இது மனுதாரரை ஜாமீனில் விடுவிப்பதற்கு இணையானதாகும். RPA இன் கீழ், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து “மூன்று மாதங்கள் கடந்துவிட்ட பிறகு” தகுதியிழப்பு நடைமுறைக்கு வரும் என்று பிரிவு 8(4) கூறுகிறது. அந்த காலத்திற்குள், உயர்நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.
ராகுல்காந்தி எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம்! – எதிர்க்கட்சியை ஒடுக்கும் செயல் என்று- கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி, திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, காங்கிரஸ் எம்.பி.ரஞ்சன் சவுத்ாி கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் சிவகுமாா், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்ரே ஆகியோா் கண்டனம் தொிவித்துள்ளனா்.