அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை (மத்தி) தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி போட்டி…!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சுந்தர்.சி போட்டியிடுவார் என்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா ஒதுக்கும் மற்றொரு தொகுதிக்கு திங்கட்கிழமை வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஏசி சண்முகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுந்தர் சி., பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள குஷ்புவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.