Rock Fort Times
Online News

முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!

கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘ரோஜாக்கூட்டம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக இவர் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்